ஹோண்டா ட்ரீம் நியோ முழுவிவரம்

0
ஹோண்டா ட்ரீம் நியோ 110சிசி பைக்கினை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ட்ரீம் நியோ பைக் ஸ்பிளென்டர் மற்றும் குறைந்த விலை பைக்களுக்கு சவாலினை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ட்ரீம் நியோ பைக்கில் ட்ரீம் யுகா 109சிசி எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பான செயல்திறன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.4 பிஎஸ் ஆகும். டார்க் 8.46என்எம் ஆகும். இந்த பைக்கினை ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது.ஹோண்டா ட்ரீம் நியோ மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.

Honda Dream Neo


Google News
ட்ரீம் நியோ பைக் மிக நீளமான இருக்கைகள் கொண்டாதாகுவும், நெடுந்தொலைவு பயணத்தின் பொழுதும் சிறப்பாக பயணிக்கும் வகையில் சஸ்பென்ஷன் விளங்கும். மிக சிறப்பான ஆலாய் வீல், நேர்த்தியான இன்ஸ்டூருமென்டல் பேனல் என ட்ரீம் நியோ விளங்கும்.
முன் மற்றும் பின்புறங்களில் ட்ரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சின் ஆகும். 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு மற்றும் சிகப்பு ஸ்ட்ரைப், கருப்பு மற்றும் வைலட் ஸ்ட்ரைப், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மான்ஸன் கிரே மெட்டாலிக், மிட்நைட் நீளம் மெட்டாலிக், ஆல்ஃபா சிகப்பு மெட்டாலிக்.
ஹோண்டா ட்ரீம் நியோ விலை விவரம்  (தில்லி எக்ஸ்ஷோரும் விலை)
1. கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல், ட்ஃப்அப் டயர்—-ரூ 43,150
 2. கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்–ரூ 44,150
3. எலக்ட்ரிக் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர் ரூ 47,240