2017 கவாஸாகி KX100 மற்றும் KX250F விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் 2017 கவாஸாகி KX100 மற்றும் கவாஸாகி KX250F என இரண்டு ஆஃப் ரோடு மோட்டோ க்ராஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரு மோட்டார்சைக்கிள்களும் பொது போக்குவரத்து சாலையில் இயக்க அனுமதியில்லை.

சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறும் வகையிலான மோட்டார் சைக்கிள்களாக விளங்கும் பிரசத்தி பெற்ற கவாஸாகி KX100 மற்றும் கவாஸாகி KX250F பைக்குகளை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் பொது போக்குவரத்து சாலைகளில் இயக்குவதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே டிராக்குகள் அல்லது மூடப்பட்ட தனி டிராக்குகளில் மட்டுமே ஓட்ட இயலும்.

கவாஸாகி KX100

கவாஸாகி கேஎக்ஸ்100 மோட்டோ க்ராஸ் மாடலில் 99சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இளம் பருவத்தினருக்கு ஏற்ற மாடலாக விளங்கும் கேஎக்ஸ்100 பைக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 36 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் அப் 275 மிமீ நீளம் வரை பயணிக்கும் தன்மை கொண்டதாகும். பின்புறத்தில் Uni-Trak மோனோ ஷாக் அட்ஜெஸ்ட்பிள் அப்சார்பர் பொருத்தப்பட்டு 275 மிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டதாகும். இதன் மொத்த எடை 77 கிலோ கிராம் ஆகும்.

கவாஸாகி KX250F

கவாஸாகி கேஎக்ஸ்250எஃப் மோட்டோ க்ராஸ் மாடலில் 249சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நடுத்தர வயதினருக்கு ஏற்ற மாடலாக விளங்கும் கேஎக்ஸ்100 பைக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள Showa’s SFF fork 310 மிமீ நீளம் வரை பயணிக்கும் தன்மை கொண்டதாகும். பின்புறத்தில் Uni-Trak linkage மோனோ ஷாக் அட்ஜெஸ்ட்பிள் அப்சார்பர் பொருத்தப்பட்டு 310 மிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டதாகும். இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 330 மீமீ ஆகும் .இதன் மொத்த எடை 107 கிலோ கிராம் ஆகும்.

கவாஸாகி KX100 மற்றும் கவாஸாகி KX250F விலை

1. 2017 கவாஸாகி KX100 – ரூ.4.68 லட்சம்

2. 2017 கவாஸாகி KX250F – ரூ. 7.14 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை )

ஆர்டிஓ கட்டணம்  , வரி போன்றவை இந்த பைக்குகளுக்கு செலுத்த தேவையில்லை என்பதனால் டெலிவரி கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.

 

Recommended For You