2017 கேடிஎம் டியூக் 390 விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் டியூக் 390 பைக் ரூபாய் 2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய 390 ட்யூக் பைக்கில் ரைட் பை வயர் , சிலிப்பர் கிளட்ச் போன்ற வசதிகள் உள்ளன.

2017 ktm duke range launched

கேடிஎம் டியூக் 390

1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலில் இருந்து உருவாக்கப்பட்ட மிகவும் ஆக்ரோஷமாக விளங்கும் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இரு வண்ண கலவையில் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

2017 KTM Duke 390 Side

புதிய 390 டியூக் பைக் மாடலில் யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 44bhp பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 NM வெளிப்படுத்தும். இதில்

புதிய பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் கொண்டு மைகேடிஎம் ஆப் வழியாக இணைத்துக்கொள்ளலாம். மேலும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக விளங்குகின்றது.

2017 KTM Duke 390 instrument panel

பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களுடன் டிரைவிங் மோட் , டபூள்யூபி ஃபோர்க் சஸ்பென்ஷன் , முன்புற டயரில் 320மிமீ பிரம்போ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. புதிய ட்யூக் 390 பைக்கில் இருக்கையின் உயரம் 20 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 830மிமீ இருக்கை உயரத்தை கொண்டுள்ளது.

முந்தைய தலைமுறை மாடலை விட ரூ. 29,614 கூடுதலாக அதிகரிக்கப்பட்டு டியூக் 390 பைக் விலை ரூ. 2.25 லட்சத்தில் அமைந்துள்ளது.

(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

2017 KTM Duke 390