2017 கேடிஎம் 250 டியூக் இந்தியா வருகை ?

வருகின்ற பிப்ரவரி 23ந் தேதி 2017 கேடிஎம் டியூக் அணிவரிசை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த வரிசையில் கேடிஎம் 250 டியூக் மாடலும் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

KTM Duke 250

கேடிஎம் 250 டியூக்

390 டியூக் பைக்கினை போன்ற தோற்ற அமைப்பினை பெற்று விளங்கும் மாடலான டியூக் 250  டீலர்கள் வசம் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கில் 248.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 31 ஹெச்பி பவருடன் , 24 Nm டார்க் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள டியூக் 200 மற்றும் டியூக் 390 பைக்குகளுக்கு இடையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய டியூக் 390 போன்ற இரட்டை பிரிவு எல்இடி விளக்குகள் , ரைட் பை வயர் போன்ற வசதிகள் இதில் இல்லை.

மேலும் 390 பைக்கில் டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக இருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் வரவுள்ள இரு மாடல்களின் விலை மற்றும் மேலும் பல விபரங்கள் பிப்ரவரி 23ல் வெளிவரவுள்ளது.