ரூ. 8.50 லட்சத்தில் 2017 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S களமிறங்கியது..!

இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S பைக் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S

2017  ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் பைக் மாடலில் 11, 250 ஆர்பிஎம் சுழற்சியில் 113 ஹெச்பி பவர், 73 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 765 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. தற்போது R மற்றும் RS மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்படவில்லை.இந்த இரண்டு மாடல்களும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

முந்தைய மாடலை விட கூடுதலான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபானெஸை வெளிப்படுத்தக்கடிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் S பைக்கின் முகப்பில் வட்ட வடிவ இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள் தனியான கம்பீரத்தை வழங்குவதுடன் பாடி பேனல்கள் மற்றும் டேங்க் அமைப்பு இரட்டை பிரிவு பெற்ற இருக்கை ஸ்டைலிசான ஸ்போர்ட்டிவ் மாடலாக நிலைநிறுத்த உதவுகின்றது.

வெறும் 166 கிலோ எடை மட்டுமே பெற்றுள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் 121 மிமீ பயணிக்கும் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

ஏபிஎஸ் மற்றும் சுவிட்சபிள் டிராக்ஷ்ன் கன்ட்ரோல் வழங்கப்படவில்லை  புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் எரிபொருள் அளவு, ஓடோமீட்டர் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

விலை

கவாஸாகி Z900 டுகாட்டி மான்ஸ்டர் 821, மற்றும் ஏப்ரிலியா ஷிவர் 900 போன்ற சூப்பர் பைக்குகளுக்கு சவாலாக அமைந்துள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S  விலை ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

2017 Triumph street triple S image gallery

Recommended For You