2018 பஜாஜ் பல்சர் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் பைக்குகளின் விற்பனை ஒரு கோடி இலக்கை கடந்ததை முன்னிட்டு பல்சர் பிளாக் பேக் எடிசன் என்ற பெயரில் 150, 180 , 220F ஆகிய மூன்று மாடல்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பல்சர் பிளாக் பேக் எடிசன்

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இந்திய இளைஞர்களின் விருப்பமான பைக் மாடலாக விளங்கும் பல்சர் வரிசை பைக்குகள் இந்தியா உட்பட 25 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் 1 கோடி விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் பிளாக் பேக் எடிசன் மாடல் பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220F ஆகிய மூன்று மாடல்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பிளாக் பேக் பல்சர் எடிசன் மாடல்கள் வெள்ளை நிற ஸ்டைலிஷான அலாய் வீல் பெற்றிருப்பதுடன், புதிய பாடி ஸ்டைல் நிறத்துடன் கூடிய பாடி ஸ்டிக்கரிங், எஞ்சின் பகுதியில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு, எக்ஸ்ஹாஸ்ட் பகுதியில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

 

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. பல்சர் 150 பைக்கில் 149cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 14 PS ஆற்றல் மற்றும் 13.4 Nm டார்க் வழங்குவதுடன், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பல்சர் 180 பைக்கில் 179cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 17.02 PS பவர் மற்றும் 14.22 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்சர் 220எஃப் மாடலில் 220cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 20.93 PS பவர் மற்றும் 18.55 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விரைவில் அதிகார்வப்பூர்வ விலை விபர பட்டியல் வெளியாக உள்ளது.

Recommended For You