ஹோண்டா ஆக்டிவா 5ஜிதோற்ற அமைப்பு, மெக்கானிக்கல் போன்றவற்றில் எவ்விதமான மாறுதல்களும் பெறாமல், எல்இடி ஹெட்லைட், புதிய நிறங்களை பெற்ற ஐந்தாவது தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 5ஜி ரூ. 52,460 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி

ஹோண்டா ஆக்டிவா 5ஜி

இந்தியாவின் இருச்சகர வாகன சந்தையில் முதன்மையான மற்றும் ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை பெற்ற மாடலாக விளங்கும் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் தோற்ற அம்சங்களில் மட்டும் மாறுதல்களை பெற்று எல்இடி ஹெட்லைட்டை பெற்றதாக வந்துள்ளது.

ஐந்தாவது தலைமுறை ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றிருப்பதுடன், புதிதாக வெளியிடப்பட்டுள்ள DLX வேரியன்டில் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் இக்கோ மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களை பெற்றிருப்பதுடன் புதிதாக மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்கள் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் சிறிய பைகளை மாட்டிக் கொள்வதுடன், மஃப்லர் பாதுகாப்பு கவர் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி

இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ள நிலையில் 109சிசி ஹோண்டா இக்கோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜின் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9 Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விலை பட்டியல்

ஆக்டிவா 5ஜி – ரூ.52,460

ஆக்டிவா 5ஜி DLX – ரூ.54,325

( எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

ஹோண்டா ஆக்டிவா 5ஜி