2018 கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு வெளியானது

ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சில மாறுதல்களை பெற்ற புதிய 2018 கேடிஎம் டியூக் 390 ஸ்போர்ட்டிவ் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வெள்ளை நிற வண்ணத்தை டியூக் 390 பைக் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 2018 கேடிஎம் டியூக் 390

கடந்த ஆண்டு முற்றிலும் மேம்படுத்தப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக வெள்ளை நிறம் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக தவறுதலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சில டியூக் 390 பைக்கின் வெள்ளை நிறம் இந்திய டீலர்களுக்கு டெலிவரி வழங்கப்பட்டதை தொடர்ந்து வெள்ளை நிறம் தற்போது அனைத்து டீலர்களுக்கும் கிடைக்க தொடங்கியுள்ளது.

2018 டியூக் 390 பைக்கில் மூன்று புதிய மாற்றங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் விற்பனை செய்யப்பட்ட 390 டியூக்கில் உள்ள பிரச்சனையை சரிசெய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது.

1 . கூலீங் திறன் அதிகரிப்பு

விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட புதிய 2018 கேடிஎம் டியூக் சிறப்பாக எஞ்சினை குளிர்விக்கும் வகையில் மிகவேகமாக ரேடியேட்டர் ஃபேன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக சிறப்பாக எஞ்சின் குளிர்விக்க வழி வகுக்கின்றது.

2. பிளேட்

ரைடர்களின் கால்களுக்கு விரைவாக எஞ்சின் வெப்பம் பரவுவதனை தடுக்கும் நோக்கில் ஃபிரேமில் இணைக்கப்பட்ட பட்டை வழங்கப்பட்டுள்ளது.

3. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

மென்பொருள் மேம்பாடு வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரில் மிக சிறப்பான இணைப்பை ஏற்படுத்த உதவுவதுடன் , ஹெட்லைட் அனைவதனை தடுக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய 390 டியூக் பைக் மாடலில் யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 44bhp பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 NM வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் கொண்டு மைகேடிஎம் ஆப் வழியாக இணைத்துக்கொள்ளலாம். மேலும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக விளங்குகின்றது.

பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களுடன் டிரைவிங் மோட் , டபூள்யூபி ஃபோர்க் சஸ்பென்ஷன் , முன்புற டயரில் 320மிமீ பிரம்போ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. புதிய ட்யூக் 390 பைக்கில் இருக்கையின் உயரம் 830மிமீ ஆக உள்ளது.

2018 கேடிஎம் டியூக் 390 பைக் விலை ரூ.2.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Recommended For You