2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், முதல் 1000சிசி க்கு குறைந்த பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் மாடலை பாகங்களை தருவித்து ஒருங்கிணைத்து 2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு ரூ.7.45 லட்சத்தில்`அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 சுசூகி GSX-S750

2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக் மாடலை காட்சிப்படுத்தியதை தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள சுசூகு டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பைக் டெலிவரி அடுத்த மாத இறுதியில் நடைபெறலாம்.

Google News

சுசூகி GSX-S1000 பைக் மாடலின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள GSX-S750 பைக் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு 4 சிலிண்டர்களை பெற்ற 749 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 114 ஹெச்பி ஆற்றல் மற்றும் 81 என்எம் இழுவைத் திறனை அளிக்கின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

41 மிமீ KYB இன்வெர்டேட் சஸ்பென்ஷனை முன்புறத்தில் பெற்று 310 மிமீ நிசான் இரட்டை டிஸ்க் பிளேட்டை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கவாஸாகி Z900 (ரூ. 7.68 லட்சம்), ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் S (ரூ. 9.19 லட்சம்) , யமஹா MT-09 (ரூ 9.55 லட்சம்) மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டுகாட்டி மான்ஸெடர் 821 ஆகிய பைக்குகளை இந்த சுஸூகி GSX-S750 பைக் எதிர்கொள்ள உள்ளது.

2018 சுசூகி GSX-S750 பைக் விலை ரூ.7.54 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம்)