இந்தியாவில் 2018 சுஸூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 சுஸூகி ஹயபுஸா சூப்பர் பைக் ரூபாய் 13 லட்சத்து 87 ஆயிரம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 சுஸூகி ஹயபுசா பைக்

வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வலவுள்ள புதிய ஹயபுஸா பைக் காட்சிக்கு வரவுள்ள நிலையில், பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.

அதிகபட்சமாக 195 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4 சிலிண்டர் கொண்ட 1304சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 155என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர். 0 முதல் 100கிமீ வேகத்தினை  வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

தற்பொழுது ஹயபுஸா சூப்பர் பைக்கில் இரண்டு புதிய நிறங்களை பெற்றுள்ளது. அவை சிவப்பு கலந்த வெள்ளை , சிவப்பு கலந்த கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றது. சிறப்பான செயல்திறன் , ஹேன்டிலிங் , நிலைப்பு தன்மை போன்றவற்றை பெற்றுள்ள மிக சிறந்த பைக்காக சுசூகி ஹயபுசா விளங்குகின்றது.

2018 சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக் ; ரூ.13.87 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Recommended For You