டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன்டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, புதிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் மாடலை ரூ.55,890 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரு விதமான நிறங்களில் மேட் சீரிஸ் கிடைக்க உள்ளது.

டிவிஎஸ் விக்டர் மேட் சீரிஸ்

டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன்

110 சிசி சந்தையில் மிக சிறப்பான ஆதரவை பெற்று விளங்கும், டிவிஎஸ் விக்டர் மாடலில் கூடுதலான ஸ்டைலிஷ் நிறத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சாதாரன மாடலை விட சில ஆயிரங்கள் அதிகமான விலையில் கிடைக்கின்றது.

மேட் ப்ளூ மற்றும் மேட் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்ற விக்டர் பிரிமியம் எடிசனின் இருக்கை பிளாக் மற்றும் பீஜ் நிறத்தில் வழங்கப்பட்டு, தங்க நிற பூச்சை பெற்ற கிளட்ச் கவர், க்ரோம் பூச்சை பெற்ற சைட் பேனல்களை பெற்றுள்ளது.

மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த பைக்கில் அதிகபட்சமாக  9.4bhp பவர்,  9.4Nm டார்க் வெளிப்படுத்தும் 110சிசி ஒற்றை சிலின்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் ஆராய் மைலேஜ் லிட்டருக்கு 72 கிமீ என சான்றயளிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் விலை ரூ.55,890 ஆகும்.