இந்தியாவில் 2019 ஹீரோ பிளெஷர் ஸ்கூட்டரின் வருகை விபரம்

0

2019 ஹீரோ பிளெஷர்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ பிளெஷர் ஸ்கூட்டர் மாடல், அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.

Google News

கடுமையான சவால் நிறைந்த ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், முற்றிலும் புதுப்பிக்கபட்ட புதிய பிளெஷரை ஹீரோ நிறுவனம் வெளியிட உள்ளது.

பிளெஷர் ஸ்கூட்டரின் சிறப்புகள்

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட 2019 பிளெஷர் ஸ்கூட்டஃ மாடலின் வர்த்தகரீதியான தொலைக்காட்சி விளம்பர படப்பிடிப்பில் ஈடுபடுகின்ற பிளஸர் ஸ்கூட்டரின் படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மேம்பட்ட மாடலாக காட்சியளிக்கின்ற புதிய பிளெஷர் ஸ்கூட்டரின் முன்புற அப்ரான் , ஹெட்லைட் , பக்கவாட்டு பேனல்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ள. மேலும் எல்இடி டெயில் விளக்கு, புதுவிதமான பாடி ஸ்டிக்கரிங் செய்யப்படிருக்கலாம்.

தற்போதைக்கு சந்தையில் கிடைக்கின்ற பிளெஷரில் 6 பிஹெச்பி மற்றும் 8 என்எம் டார்க் வழங்கும் 102 சிசி என்ஜின பொருத்தப்பட்டிருக்கின்றது. இதே என்ஜினை புதிய மாடல் பெற்றிருக்கலாம் அல்லது மேஸ்ட்ரோ எட்ஜ் , டூயட் ஸ்கூட்டர்களில் உள்ள 110சிசி என்ஜின் பொருத்தப்படலாம்.

2019 ஹீரோ பிளெஷர்

image source -mumbai mirror

130 மிமீ டிரம் பிரேக் இரு டயர்களிலும் பொருத்தப்பட்டு அடிப்படை பாதுகாப்பு அம்சமாக ஐபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கின்ற பிளெஷரை விட ரூ.1000 வரை புதிய மாடலுக்கு விலை உயர்த்தப்படலாம்.