ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு வெளியானது

0

honda Africa twin

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் ரூபாய் 15.35 லட்சம் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.10 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா பிக்விங்க் டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விநியோகம் மே மாதம் துவங்கப்பட உள்ளது.

இந்த ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கில் 1,084 சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகபட்சமாக 101 பிஹெச்பி பவர் மற்றும் 105 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆறு வேக டிசிடி (இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக்) டிரான்ஸ்மிஷன் என இரு ஆப்ஷனில் தேர்வு செய்ய இயலும்.

இந்த இரு சக்கர வாகனத்தில் 6.5 அங்குல டி.எஃப்.டி தொடுதிரை உடன் கூடிய அம்சத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சங்களை பெற்றுள்ளது. மேலும், அர்பன், கிராவல், டூர் மற்றும் ஆஃப் ரோடு என நான்கு விதமான ஓட்டுதல் முறை கொண்டுள்ளது.