2021 கேடிஎம் 890 அட்வென்ச்சர் அறிமுகமானது

KTM 890 Adventure

டாக்கர் ரேலியில் பயன்படுத்தப்படுகின்ற ரைடிங் டைனமிக்ஸ் பெற்ற 2021 கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. முன்பாக 890 அட்வென்ச்சர் ஆர் மற்றும் 890 அட்வென்ச்சர் ரேலி பைக்குகள் விற்பனையில் உள்ள நிலையில் பேஸ் மாடல் தற்போது வந்துள்ளது.

Euro V மாசு விதிகளுக்கு உட்பட்ட 899சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 bhp பவரை 8,000 rpm மற்றும் 100 Nm டார்க் 6,500 rpm -யில் வழங்குகின்றது. இந்த மாடலின் இன்ஜின் பற்றி கேடிஎம் கூறுகையில் 20 சதவீத கூடுதல் சுழலும் நிறை கிராங்க் ஷாஃப்டில் கொடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பான திறனை குறைந்த வேகத்திலும், நெடுந்தொலைவு பயணித்திற்கும் ஏற்றதாக அமைந்திருக்கும்.

20 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள கேடிஎம் 890 டியூக் மாடலில் 200 மிமீ பயணிக்கின்ற யூஎஸ்டி ஃபோர்க்கு, பின்புறத்தில் ரீபவுன்டேட் மற்றும் அட்ஜெஸ்டபிள் WP Apex மோனோ ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், மோட்டார் ஸ்லீப் ரெகுலேஷன் இணைக்கப்பட்டுள்ளது.

KTM 890 Adventure Side view

4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய இரட்டை 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிப்பருடன் 260 மிமீ டிஸ்க் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடலில் டர்ன் பை டர்ன் வழிசெலுத்தல், பயணக் கட்டுப்பாடு, குயிக் ஷிஃப்ட்டர் +, சூடான இருக்கை மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றுடன் கேடிஎம் மை ரைடு ஆப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் முதல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும், இந்திய சந்தையில் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்திலும் விற்பனைக்கு வரவுள்ளது.

KTM 890 Adventure bike Rear

web title : 2021 KTM 890 Adventure debuts – Bike news Tamil