ரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது

0

 Royal-Enfield-Bullet-350

குறைவான விலை கொண்ட மாடலாக புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மூன்று புதிய நிறங்களை பெற்று 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மேலும் கூடுதலாக எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற புல்லட் 350 ES வேரியண்டிலும் மூன்று வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த மாடல்கள் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும்.

புல்லட் எக்ஸ் என முன்பாக அறியப்பட்ட நிலையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 என்று மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிளில் பிஎஸ் 4 ஆதரவு பெற்ற 350சிசி என்ஜின் பெற்று அதிகபட்சமாக 19.8 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பல்வேறு வண்ணங்களுடன் டேங்க் டிசைனில் ஸ்டாண்டர்டு புல்லட் போன்று கைகளில் வரையப்படுகின்ற கோல்டன் பின் ஸ்டிரிப் இடம்பெறாமல்  போன்ற டேங்கில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதே போல் என்ஜின் கருப்பு நிற ஃபினிஷை பெற்றும், சில நிறங்களில் கிராங் கேஸ் மட்டும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பெரும்பாலான பாகங்களுக்கு மாற்றறாக பிளாக் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.

புல்லட் 350 பைக்கில் மூன்று புதிய நிறங்களாக ப்ளூ, சில்வர் மற்றும் பிளாக் எனவும், 350 ES மாடலில் ராயல் ப்ளூ, ரீகல் ரெட் மற்றும் ஜெட் பிளாக் வண்ணங்கள் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 – ரூ.1.12 லட்சம்

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 ES – ரூ.1.21 லட்சம்

(எகஸ்ஷோரூம்)