ஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டர் விபரம் வெளியானது

0

ஸ்போர்ட்டிவ் பிராண்டாக விளங்கும் பியாஜியோவின் ஏப்ரிலியா இளைய தலைமுறையினரை கவர்ந்த ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் மாடல்களை தொடர்ந்து, குடும்பங்களுக்கு ஏற்ற ஃபேம்லி ஸ்கூட்டர் மாடலாக ஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபரிதமான வரவேற்ப்பை பெற்ற ஸ்போர்ட்டிவான ஏப்ரிலியா SR150 மாடலை தொடர்ந்து ஏப்ரிலியா SR125 விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், கூடுதலாக ஸ்கூட்டர் சந்தையில் குறைந்த ஸ்போர்ட்டிவ் தன்மை கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ற மாடலாகவும் மிகப்பெரிய ஸ்கூட்டர் சந்தையில் நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் ஏப்ரிலியா SR 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 125 சிசி என்ஜினை பெற்ற  மாடலை ஏப்ரிலியா கம்ஃபோர்ட் என்ற பெயரில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஸ்கூட்டர் தாராளமான ஃபுளோர் போர்டு, அகலமான இருக்கை அமைப்பு, இருக்கை அடியில் அதிகப்படியான ஸ்டோரேஜ் உட்பட பெரும்பாலான பாகங்கள் SR 125 ஸ்கூட்டரில் இருந்து பெற உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் மிக சொகுசான பயன அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

இதுகுறித்து Bikewale தளம் வெளியிட்டுள்ள செய்தியில் புதிய பட்ஜெட் ரக ஃபேம்லி ஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 2019 யில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.  இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி, ஹோண்டா ஆக்டிவா மாடல்களையும் எதிர்கொள்ள உள்ளது.