100 ஹெச்பி பவர்.., 2019 இஐசிஎம்ஏ ஏப்ரிலியா RS660 பைக் வெளியானது

0

Aprilia RS660

2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி அரங்கில் புதிய ஏப்ரிலியா RS660 பைக் மாடலை பியாஜியோ குழுமம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் மத்தியில் இணையான இரு சிலிண்டர் என்ஜின் பெற்ற ஆர்எஸ்660 பைக் வெளியாக உள்ளது.

Google News

ஏப்ரிலியா ஆர்எஸ் 660 மிகவும் கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் தன்மையுடன் ஏரோ விங்லெட்ஸ் மற்றும் நேர்த்தியான ஸ்டைலிங் பேனல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாக விளங்குகின்றது. ஸ்டீரிட் பைக் மாடலாக விளங்குகின்ற இந்த ஃபேரிங் பைக்கில் மிக சிறப்பான முறையில் டெயில் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ் 660 பைக்கில் இடம்பெற்றுள்ள 660 சிசி என்ஜின், 100 பிஹெச்பி உற்பத்தி செய்யும் பேரலல் ட்வின் சிலிண்டர் பெற்றதாக வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் தொகுப்புடன் வந்துள்ளது. இதில் வீல் கட்டுப்பாடு, கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ஐந்து விதமான சவாரி முறைகள் மற்றும் இரு வழி விரைவான ஷிஃப்ட்டர் ஆகியவை அடங்கும். மேலும், இந்த மாடலில் இரண்டு திரை கொண்ட ப்ளூடூத் ஆதரவு பெற்ற 5 அங்குல டிஎஃப்டி திரையையும் கொண்டுள்ளது.

2020 aprilia rs660 first look cluster

41 மிமீ கயாபா இன்வெர்டேட் ஃபோர்க் முன்பக்கமும் பின்புறத்தில்  மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. ப்ரெம்போ பிரேக்கிங் திறனுக்கு இரட்டை 320 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரிலியா RS660 மாடலில் இரண்டு வண்ணங்களில் வழங்குகிறது  சிவப்பு நிறத்துடன் மேட் கருப்பு மற்றும் RS250 ரெஜியானி மோட்டார் சைக்கிளால் ஈர்க்கப்பட்ட சிவப்பு வண்ணப்பூச்சுடன் ஊதா இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வெளியாக உள்ள ஏப்ரிலியா RS660 பைக் விலை ரூ.10 லட்சத்தில் வெளியாகலாம்.

2020 aprilia rs660 sportsbike aprilia rs660 sportsbike Aprilia RS660 Aprilia RS 660 Aprilia RS660 sideAprilia RS 660