புதிய பஜாஜ் டாமினார் 250 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

0

dominar 250

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டாமினார் 400 பைக்கின் அடிப்படையில் வெளியிடப்பட உள்ள குறைந்த விலை பஜாஜ் டாமினார் 250 பைக் அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு டீலர்கள் வாயிலாக துவங்கப்பட்டுள்ளது. எனவே, 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி முன்பதிவினை செய்துக் கொள்ளலாம்.

Google News

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற டாமினாரின் தோற்ற வடிவமைப்பினை தன்னகத்தே பெற்றுக் கொண்டுள்ள 250சிசி என்ஜின் பெற்ற மாடலில் டைமன்ட் கட் அலாய் வீல் கொடுக்கப்படாமல், D250 பேட்ஜ், சிறிய அளவிலான டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. மற்றபடி கிளஸ்ட்டர், ஹெட்லைட் உட்பட டேங்கின் அமைப்பு போன்றவை அனைத்தும் முன்பாக உள்ள மாடலில் இருந்து பெற்றுள்ளது. புதிதாக சிவப்பு நிறத்தை இந்த மாடல் கொண்டுள்ளது.

விற்பனைக்கு கிடைத்து வருகின்ற கேடிஎம் 250 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 250 சிசி என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும். 248.8 சிசி, திரவத்தினால் குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் செயல்படும். 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய பஜாஜ் டாமினார் 250 பைக்கின் விலை ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் துவங்க வாய்ப்புள்ளது. இது விற்பனையில் உள்ள 400சிசி மாடலை விட ரூ.25,000 வரை குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.