ரூ.1.50 லட்சத்தில் பஜாஜ் டோமினார் 250 விற்பனைக்கு வெளியாகும்

0

dominar 400

வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சத்தில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த மாடலின் என்ஜின் கேடிஎம் டியூக் 250 பைக்கிலிருந்து பெற உள்ளது.

Google News

சேஸ் உட்பட பெரும்பாலான டிசைன் அம்சங்களை டோமினார் 400 பைக்கிலிருந்து பெறுவதுடன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றதாகவும், அதேநேரத்தில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற கேடிஎம் 250 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 250 சிசி என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும். 248.8 சிசி, திரவத்தினால் குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் செயல்படும். 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே என்ஜின் ஹஸ்க்வர்னா விட்பிலன் 250 மற்றும் ஸ்வார்ட்பிலன் 250 பைக்குகளிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் விற்பனைக்கு ரூ.1.80 லட்சத்தில் வெளியாகியுள்ளதால் இந்த மாடலை விட குறைவாகவே அமைந்திருக்கலாம்.

புதிய டோமினார் 250 பைக் மாடல் மார்ச் மாதம் மத்தியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.