பஜாஜ் பல்சர் N250, F250 பைக்குகள் விற்பனைக்கு வந்தது

0

pulsar 250

மிகவும் பவர்ஃபுல்லான பல்சர் பைக் மாடலாக N250 மற்றும் F250 என இரு மாடல்களும் ரூ.1.38,000 முதல் ரூ.1,40,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நேக்டூ ஸ்டைல் பெற்ற என்250 மற்றும் எஃப்250 என இரண்டு பைக்கிலும் LED ஹெட்லைட் மற்றும் LED பகல்நேர ரன்னிங் விளக்குகளைப் பயன்படுத்துகின்றன. மோட்டார் சைக்கிளில் பிளவுபட்ட இருக்கைகள் மற்றும் முழு டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்றது. F250 பைக்கில் கூர்மையான தோற்றமுடைய செமி ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஃபேரிங்கிற்குப் பின்னால் கிளிப்-ஆன் ஹேண்டில்பார் உயர்த்தப்பட்டுள்ளது.

பல்சர் N250,LED ஹெட்லைட்டுடன் ஆக்ரோஷமான தோற்றத்தை கொண்டுள்ளது. பல்சர் குடும்பத்தில் உள்ள மற்ற மாடல்களில் காணப்படும் இரட்டை எல்இடி டெயில் விளக்குகளுடன், வழக்கமான டிசைனில் உள்ள அலாய் வீல் இடம் பெற்றுள்ளது.

இரு பல்சர் பைக்குகளிலும் 249cc, SOHC, ஆயில்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

முன்பக்கத்தில் உள்ள சஸ்பென்ஷனில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த பைக்குகள் 300மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளன. 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பெற்றுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பல்சர் 220F மாடலை விட ரூ.4,000 விலை கூடுதலாக அமைந்துள்ளது.

பஜாஜ் பல்சர் N250, F250 விலை பட்டியல்

F250 – ₹1.4 lakh

N250 – ₹1.38 lakh