பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

0

Bajaj Pulsar NS 160 bs6

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் விற்பனை செய்யப்படுகின்ற பல்சர் என்எஸ் 160 பைக்கில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டு ரூ.1,04,652 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த பிஎஸ்4 மாடலை விட ரூ.10,500 வரை விலை அதிகரித்துள்ளது.

Google News

160.3cc, 4-வால்வுகளை பெற்ற சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 17 hp பவர் மற்றும் 14.6 Nm முறுக்கு விசை வெளிபடுத்தும். இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்துகின்றது. பிஎஸ்4 என்ஜின் 15.5 hp பவரை வெளிப்படுத்தியது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் , பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த மாடலின் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது.

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் விலை ரூ.1,04,652 ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 160, ஹோண்டா சிபி ஹார்னெட் மற்றும் சுசூகி ஜிக்ஸ்ர் போன்ற பைக்குகள் போட்டியாக விளங்குகின்றது. மேலும் விற்பனைக்கு வரவுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கினை எதிர்கொள்ள உள்ளது.