ரூ.2.51 லட்சத்தில் பெனெல்லி TRK 251 விற்பனைக்கு வந்தது

0

Benelli TRK 251 adventure

பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அட்வென்ச்சர் அட்வென்ச்சர் டூரர் மாடல் TRK 251 பைக்கின் விலை ரூ.2.50 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

Google News

இந்திய சந்தையில் கிடைக்கின்ற கேடிஎம் டியூக் கேடிஎம் ADV 250 மாடல் நேரடியாக எதிர் கொள்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லியோன்சினோ 250 மாடலில் இடம்பெற்றுள்ள 250சிசி எஞ்சின் பகிர்ந்து கொள்கின்ற மாடலானது மிக நேர்த்தியான அம்சங்களையும் கொண்டிருக்கின்றது.

ஸ்டீல் டெர்ரில்ஸ் பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டிஆர்கே 250 மாடலில் முன்புறத்தில் யுஎஸ்டி போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 170 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது பொறுத்தவரை ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுகள் மையான டிஜிட்டல் கிளஸ்டர் போன்றவை பெற்றுள்ள இந்த மாடலுக்கு 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்  வழங்கப்பட்டுள்ளது