ரூ.20.90 லட்சத்தில் 2020 பிஎம்டபிள்யூ S 1000 XR விற்பனைக்கு அறிமுகம்

0

All New BMW S 1000 XR

மிகவும் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் இன்ஜின் பெற்ற 2020 பிஎம்டபிள்யூ S 1000 XR பைக்கின் விலை ரூபாய் 20.90 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சிபியூ முறையில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பல்வேறு நேக்டூ ஸ்போர்ட்டிவ் டூரிங் ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ள புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள 999சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 165 HP பவருடன் 114 Nm டார்க் வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் உதவியுடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக என்ஜின் டிராக் டார்க் கன்ட்ரோல் இணைக்கப்பட்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.3 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும். S 1000 XR பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் பல்வேறு நவீனத்துவமான எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது. இந்த மாடலில் மழை, ரோடு, டைனமிக் மற்றும் டைனமிக் புரோ என நான்கு விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டு, டைனமிக் புரோ மோடில் ரைடர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்துக் கொள்ளலாம். இந்த மாடலில் 6.5 அங்குல டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ S 1000 XR பைக் விலை ரூ.20.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா)