ரூ.1.21 லட்சத்தில் பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வெளியானது

0

bs6 royal enfield bullet 350

நீண்ட பாரம்பரியம் பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிஎஸ்6 புல்லட் 350 மற்றும் புல்லட் X 350 ES மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்4 பைக்கினை விட ரூ.13,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

புல்லட் மாடலை விட சற்று குறைவான க்ரோம் பாகங்கள் மற்றும் கருப்பு நிற பாகங்களை அதிகப்படியாக கொண்டதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் டேங்கில் வழங்கப்படுகின்ற பேட்ஜ் நீக்கப்பட்டு சாதாரன ராயல் என்ஃபீல்டு லோகோ கொண்டிருக்கின்றது. மேம்பட்ட பிஎஸ்6 என்ஜினை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

bs6 royal enfield bullet 350 es

முந்தைய கார்புரேட்டர் என்ஜினுக்கு மாற்றக புதிய FI என்ஜினை பெற்று 19.1 BHP பவரை 5250 RPM-லும், 4000 RPM-ல் 28 Nm டார்க்கினை வழங்கும் 346 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை

Bullet X 350 – ரூ. 1,21,583
Bullet 350 – ரூ. 1,27,750
Bullet X 350 ES – ரூ. 1,37,194

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ.13,000 வரை விலை உயர்த்தபட்டுள்ளது.

bs6 royal enfield bullet 350