புதிய பிஎஸ்6 TVS NTroq 125, ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

0

TVS NTroq 125 ரேஸ் எடிசன்

125 சிசி சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்டைலிஷான் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 6,513 முதல் அதிகபட்சமாக ரூ.9,980 வரை விலை உயர்ந்துள்ளது.

என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.

இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளில் மிக முக்கியமானது கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளாகும். ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட என்டார்க் 125 ரேஸ் எடிசன் மாடலில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளதால், மற்ற வேரியண்டுகளும் எல்இடி ஹெட்லைட் பெற வாய்ப்புகள் உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 BS6 BS4 வித்தியாசம்
டிரம் பிரேக் ரூ.65,975 ரூ.59,462 ரூ.6,513
டிஸ்க் பிரேக் ரூ.69,975 ரூ.59,995 ரூ.9,980
ரேஸ் எடிஷன் ரூ.72,455 ரூ.64,925 ரூ.7,530