ரூ. 62,034 விலையில் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு வெளியானது

TVS Star City Plus BS6

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் டூயல் டோன் மற்றும் சிங்கிள் டோன் என இரு விதமான வேரியண்டை பெற்று ஆரம்ப விலை ரூ.62,034 முதல் தொடங்குகின்றது.

ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் முக்கியமான மாற்றமாக விளங்குகின்ற பிஎஸ்6 ஆதரவுக்கு ஏற்ப எஃப்ஐ (ETFi or Eco-Thrust fuel injection) பெற்ற என்ஜின் ஆகும். தற்போது, விற்பனைக்கு வந்துள்ள மாடல் 109 சிசி, ஏர்-கூல்ட் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8.3 பிஹெச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும். புதுப்பிக்கப்பட்ட fi (ETFi or Eco-Thrust fuel injection) பெற்ற மாடல் முந்தைய பிஎஸ்4 பைக்கை விட 15 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட், புதுப்பிக்கப்பட்ட ஹெஅட்லைட் வைசர், ரியர் வியூ மிரர் போன்றவற்றுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் செமி டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கலாம்.

இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கும். இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொண்ட மாடலில் சிங்கிள் டோன் எனப்படும் ஒற்றை நிறம் மற்றும் டூயல் டோன் என இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ.62,034 மற்றும் டூயல் டோன் விலை ரூ.62,534 மட்டும் ஆகும். முந்தைய மாடலை விட ரூ.7,500 வரை விலை உயர்ந்துள்ளது.  சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹெச்எஃப் டீலக்ஸ்ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஸ்மார்ட் போன்ற பிஎஸ்6 மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.