Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

By MR.Durai
Last updated: 24,December 2019
Share
SHARE

ஹோண்டா ஷைன் SP125

முந்தைய சிபி ஷைன் எஸ்பி மாடலை விட முற்றிலும் மேம்பட்ட புதிய ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் வழங்கப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜின் மற்றும் புதிய ஸ்டைல், பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டதாக வந்துள்ளது.

ஸ்டைல் & டிசைன்

முந்தைய மாடலை போல மிக நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் கொண்ட ஸ்டைலிங் அம்சத்துடன் எல்இடி ஹெட்லைட், ஸ்டைலிஷான இன்டிகேட்டர், மெட்டாலிக் ரெட், க்ரீன், ப்ளூ மற்றும் மேட் கிரே என மொத்தம் நான்கு மாறுபட்ட வண்ணங்களை பெற்றுள்ளது.

சிபி ஷைன் எஸ்பி 125 பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1,285மிமீ ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக்கின் நீளம் 13 மிமீ அதிகரிக்கப்பட்டு, 2020 மிமீ ஆக உயர்ந்துள்ளது. அடுது பைக்கின் அகலம் 23 மிமீ உயர்த்தப்பட்டு, 785 மிமீ ஆகவும், அதேவேளை, பைக்கின் உயரம் 82 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.

என்ஜின்

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் மைலேஜ் ஓட்டுதலில் 52 கிமீ முதல் 55 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் சீரான் பயணத்தையும், டாப் ஸ்பீடு 100 கிமீ வேகத்தை எட்டுகின்றது.

ஹோண்டா ஷைன் SP125

புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர்

பல்வேறு விதமான வசதிகளைப் பெற்ற புதிய எஸ்.பி. 125 பைக்கில் குறிப்பாக வழங்கப்பட்டுள்ள புதிய முழு டிஜிட்டல் கருவி கிளஸ்டரையும் கொண்டுள்ளது, இது பைக்கின் நிகழ்நேர எரிபொருள் செயல்திறன், பெட்ரோல் இருப்பிற்கான தூரம், கியர் நிலை காட்டி மற்றும் பலவற்றைக் காட்டுகிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், டெயில்லைட், 5 ஸ்போக்குடு அலாய் வீல், என்ஜின் கில் சுவிட்சு மற்றும் பல மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டைலிங் கூறுகளை கொண்டதாக கிடைக்கின்றது.

போட்டியாளர்கள்

ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் நேரடி போட்டியாளர்களாக ஹீரோ கிளாமர் 125, பஜாஜ் பல்சர் 125 மற்றும் யமஹா சல்யூட்டோ 125 போன்றவை விளங்குகின்றன.

ஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை

BS6 Honda SP125 – ரூ.75,672 (டிரம்)

BS6 Honda SP125 – ரூ.79,872 (டிஸ்க்)

(சென்னை எக்ஸ்ஷோரூம்)

ஹோண்டா ஷைன் SP125

ஹோண்டா ஷைன் SP125

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Honda SP125
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்
Ather energy
ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved