இந்தியாவில் கார்பெர்ரி டபுள் பேரல் 1000cc என்ஜின் பைக் அறிமுகம்

ஆஸ்திரேலியா நாட்டின் பால் கார்பெர்ரி கீழ் செயல்படும் கார்பெர்ரி என்ஃபீல்டு நிறுவனம் இரண்டு 500சிசி ராயல் என்ஃபீல்டு என்ஜின்களை இணைத்து கார்பெர்ரி டபுள் பேரல் 1000சிசி V-Twin மாடலாக ரூ.7.35 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்

ஆஸ்திரேலியா நாட்டில் செயல்பட்டு வந்து பால் கார்பெர்ரி உடன் இணைந்து இந்தியாவின் ஜஸ்பிரித் சிங் பாட்டியா என்ற தொழிலதிபர் வாயிலாக சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் தொழிற்சாலையை அமைத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 500சிசி ஒற்றை சிலிண்டர் கொண்ட எஞ்சினில் மாற்றங்களை செய்து, வி-ட்வின் என்ற V வடிவிலான இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 1,000சிசி எஞ்சினை பால் கார்பெர்ரி தனது நிறுவனத்தின் மூலமாக 55 டிகிரி கோணத்தில் வி வடிவத்தில் டூயல் கார்புரேட்டர் அமைப்புடன் வடிவமமைக்கப்பட்டுள்ளது. 1000சிசி எஞ்சினை பொருத்தும் வகையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடலில் ஃப்ரேமிலும் சில மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய கார்பெர்ரி டபுள் பேரல் வி-ட்வீன் எஞ்சின் 53 ஹெச்பி ஆற்றலுடன் 82Nm டார்கினை வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் 7 பிளேட் கிளட்ச் கொண்டதாக வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் தோற்ற அமைப்பிலே வடிவமைக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய வரவேற்பினை ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மூலம் பெறும் வாய்ப்புகள் உள்ளது. கார்பெர்ரி டபுள் பேரல் முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் அமைப்புடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆராய் அமைப்பின் ஹோமலோகேஷன் அனுமதிக்காக காத்திருக்கின்றது.

முதல் பேட்சில் 29 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம் ரூபாய் ஒரு லட்சம் வரை முன்பதிவு கட்டணமாக செலுத்தினால் அடுத்த 10 மாதங்களுக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

Website:- www.carberrymotorcycles.com
Mail:- sales at carberrymotorcycles.com
Mobile no:- 8518811111 (WhatsApp only)

Recommended For You