இந்தியாவில் களமிறங்கும் எஃப்பி மோண்டியால் மோட்டார்சைக்கிள்

இத்தாலி நாட்டின் FB மோண்டியால் நிறுவனம் இந்திய சந்தையில் முதல் ஸ்க்ராம்பளர் பைக் மாடலாக எஃப்பி மோண்டியால் ஹெச்பிஎஸ் 125 விற்பனைக்கு வரவுள்ளது. ஹிப்ஸ்டெர் அல்லது HPS 125 என்ற பெயரில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

FB மோண்டியால் HPS 125

சமீபத்தில் புனே அருகில் உள்ள ஆராய் ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்ட HPS 125 பைக் படங்கள் வெளியானதை தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 125சிசி ஸடிரீட் ஸ்க்ராம்பளர் பைக் மாடலான ஹிப்ஸெடெர் 125 பைக்கில் அதிகபட்சமாக 15 bhp வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல் மிக சிறப்பான செயல்திறன் மற்றும் உயர்தர அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.

முன்புறத்தில் 41 mm இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் சாக் அப்சார்பரை பெற்று விளங்கும், மோண்டியால் எச்பிஎஸ் 125 பைக்கில் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றிருப்பதுடன் 130கிலோ எடை கொண்ட மாடலின் முன்புறத்தில் 18 அங்குல சக்கரம், பின்புறத்தில் 17 அங்குல சக்கரம் பெற்றிருக்கின்றது.

1960-70 களில் பிரசத்தி பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமாக விளங்கிய  FB மோண்டியால் மிகவும் சிறப்பான கிளாசிக் ரக அம்சத்துடன் பல்வேறு மோட்டார்சைக்கிள்களை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்திய சந்தையில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் அல்லது கைனெட்டிக் மோட்டார் ராயல் பிராண்டின் வாயிலாக இந்நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளது.

Recommended For You