இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை தயாரிக்கிறது : ஹீரோ மோட்டோகார்ப்

0

Harley Davidson Street 750

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்திய சந்தையில் ஹார்லி பைக்குகள் கிடைக்க துவங்கியுள்ளது.

Google News

இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை விற்பனை, சர்வீஸ், உதிரிபாகங்கள், பொருட்கள், ரைடிங் கியர் மற்றும் ஆடைகளை பிராண்ட்-பிரத்தியேக ஹார்லி-டேவிட்சன் டீலர்கள் மற்றும் இந்தியாவில் தற்போதுள்ள ஹீரோவின் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய உரிம ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லி-டேவிட்சன் பிராண்ட் பெயரில் பல வகையான பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்யும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லி-டேவிட்சன் அறிவித்த REWire திட்டத்தின் ஒருபகுதியாக அமைய உள்ளது. முன்பாக இந்நிறுவனம் இந்திய சந்தையிலிருந்து நேரடி விற்பனை முறையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தது. தற்போது ஹார்லி-டேவிட்சன் நாட்டின் முதன்மையான ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து வரவுள்ளதால் ஹார்லி ரசிகர்களுக்கு மிகப்பெரும் செய்தியாக அமைந்துள்ளது.

Web title : Harley-Davidson and Hero Motocorp announce partnership in india