ஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

0

ஹீரோ பைக்குகளின் உதிரிபாகங்கள் மற்றும் ஆக்செரீஸ்கள் ஆகியவற்றை நாடு முழுவதும் ஆன்லைன் வழியாக விற்பனை மற்றும் டெலிவரி செய்வதற்கான பிரத்தியேகமான இணையதளத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தரமான உண்மையான உதிரிபாகங்கள் மற்றும் துனைக்கருவிகளை பெறும் நோக்கில் hgpmart.com என்ற இணைய முகவரியில் பிரத்தியேகமான ஆன்லைன் விற்பனை பிரிவினை தொடங்கியுள்ளது.

Google News

இந்த விற்பனை வலைதளத்தில் விற்பனையில் உள்ள மாடல்கள் உட்பட நீக்கப்பட்ட முந்தைய மாடல்களுக்கும் உதிரிபாகங்களை வழங்க உள்ளது. இந்த இணையதளத்தில் பயனாளர்கள் பார்ட்  நெம்பர், வின் எண் ஆகியவற்றை கொண்டும் உதிரிபாகங்களை மிகச் சரியாக தேர்ந்தெடுக்கலாம்.

டெல்லிவெரி வாயிலாக நாடு முழுவதும் உதிரிபாகங்களை டெலிவரி செய்வதற்கான வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஹீரோ நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வந்தது.

விரைவில் ஹீரோ நிறுவனம், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய பைக்குகள் விற்பனைக்கு வெளியாக உள்ளது.