ஹீரோ மோட்டோகார்ப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவா .?

0

hero motocorp ev scooter spotted

உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் படம் முதன்முறையாக கசிந்துள்ளது. அனேகமாக படத்தில் உள்ள ஸ்கூட்டர் ஹீரோவின் முதல் மின்சார மாடலாக அமையலாம்.

Google News

தற்போது படத்தில் காண கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக நேர்த்தியான நவீனத்துவமான டிசைன் அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் 12 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 10 அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

மற்றபடி, தோற்ற அம்சங்களில் பெரிதாக வெளியாகவில்லை. அடுத்தப்படியாக தொழில் நுட்ப சார்ந்த அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பாக தாய்வான் நாட்டைச் சேர்ந்த கோகோந்த நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி ஸ்வாப் மற்றும் டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் டிசைனை பின்பற்றாமல் முற்றிலும் புதிய வடிவத்தை ஹீரோ ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.