ஜனவரி முதல் ஹீரோ பைக்குகள் விலை உயருகின்றது

0

hero Splendor Black and Accent in Bettle Red

வருகின்ற 2021 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மாடல்களின் விலையை கணிசமாக உயர்த்த உள்ளது. நம் நாட்டின் பெரும்பாலான மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகின்றன.

Google News

அந்த வகையில் முன்பாக பஜாஜ் ஆட்டோ மற்றும் பல்வேறு கார் நிறுவனங்கள் சமீபத்தில் விலையை உயர்த்துவதனை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஹீரோ நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இந்நிறுவனம் தனது மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூபாய் 1500 வரை விலை உயர்த்தயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மாடல் வாரியாக எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது போன்ற விபரங்கள் எல்லாம் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. இவை வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.