2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – IMOTY 2020

0

hero xpulse 200 imoty 2020

2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை அட்வென்ச்சர் பைக் மாடலாக எக்ஸ்பல்ஸ்200 விளங்குகின்றது.

Google News

சிறந்த பைக்கிற்கான தேர்வுமுறையில் பைக் விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் ஜூரி சுற்று மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், ஆட்டோ டுடே சார்பாக ராகுல் கோஷ் மற்றும் தீபயன் தத்தா, ஆட்டோஎக்ஸ் பத்திரிக்கையின் ஜாரெட் சோலோமன் மற்றும் அருப் தாஸ், பைக் இந்தியாவைச் சேர்ந்த ஆஸ்பி பதேனா மற்றும் சர்மத் கதிரி, EVO-வைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன், மோட்டாரிங் வோர்ல்டு சேர்ந்த கார்த்திக் வேர் மற்றும் பப்லோ சாட்டர்ஜி, அபய் வர்மா மற்றும் ரோஹித் பரத்கர் ஓவர் டிரைவ், பைக்வாலே சிங் மற்றும் விக்ராந்த் போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் சிறந்த பைக் பட்டியிலில் ஜூரி சுற்றில் இடம்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள் பட்டியல் பின் வருமாறு..,பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160, பல்சர் 125, பெனெல்லி இம்பீரியல் 400, பெனெல்லி டிஆர்கே 502 எக்ஸ், பெனெல்லி லியோன்சினோ 500, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200, ஹோண்டா சிபி 300 ஆர், ஜாவா 42, கேடிஎம் 125 டியூக், கேடிஎம் 790 டியூக், கேடிஎம் ஆர்சி 125 ஏபிஎஸ், சுசுகி ஜிக்ஸர் 250 மற்றும் யமஹா எம்டி-15 போன்றவை ஆகும்.

2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் ஹோண்டா சிபி300ஆர் மற்றும் ஜிக்ஸர் 250 மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருக்கின்ற 200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி பவர் மற்றும்  17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

மேலும், இந்தியாவின் சிறந்த கார் 2020 முடிவில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மற்றும் பிரீமியம் கார் மாடலாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.