ஹீரோ எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சர் ரேலி கிட் விலை ரூ.38,000

0

hero-xpulse-rally-kit

பிரபலமான குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு ஸ்பெஷல் ரேலி கிட் கூடுதலாக ஆக்செரீஸ் வழங்கப்பட்டுள்ளவை விலை ரூபாய் 38,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

இந்த கிட்டை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது முழு கிட்டையும் விரும்பாதவர்களுக்கு, ஹீரோ இந்த பாகங்கள் தனித்தனியாக விற்பனைக்கு வழங்க உள்ளது. எனவே, விருப்பமானவற்றை மட்டும் இணைத்துக் கொள்ளலாம்.

அதிகபட்சமாக 275 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற மாடலாக வரவுள்ளது. 200சிசி என்ஜின் பெற்ற இந்த பைக்கில் அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும்  17.1 Nm  டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மாக்ஸிஸ் ஆஃப்-ரோடு டயர்கள், நீண்ட தொலைவு  பயணக்கூடிய சஸ்பென்ஷன், உயரமான இருக்கை, ஹேண்டில்பார் ரைசர், பெரிய ஃபுட்ரெஸ்ட் மற்றும் முன்புறத்தில் 12 பற்கள் கொண்ட ஸ்பிராக்கெட் பின்புறத்தில் 40 பற்களை பெற்ற ஸ்பிராக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்பல்ஸின் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இது கிடைக்கிறது.

Adjustable suspension (Forks and monoshock) Rs 25,000
Maxxis rally spec tyres Rs 10,000
Flat seat Rs 2,500
Handlebar risers Rs 500