இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியானது

ஹோண்டா ஆக்டிவா 6ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 6ஜி சோதனை செய்யப்படுகின்ற படங்கள் இணையத்தில் முதல்முறையாக வெளியாகியுள்ளது.

மாதந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படு வருகின்றது. குறிப்பாக இங்கே காணப்படும் படம் 125 சிசி ஆக்டிவா போன்றதாக காட்சியளிக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்

பெரிதாக டிசைன் சார்ந்த மாற்றங்கள் இடம்பெறாமல் ஸ்பை படங்கள் காட்சியளிக்கின்றது. தோற்ற அமைப்பில் முன்புற அப்ரான் , ஃபென்டர் மற்றும் ஹெட்லைட் போன்றவற்றில் சிறிய அளவிலான மாற்றங்கள், பக்கவாட்டில் அமைந்துள்ள பேனல்களில் புதுவிதான பாடி கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6G

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் வழங்கப்படாலும் பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் பெற்றதாகவும், புதிய வடிவத்திலான அலாய் வீல் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கின்றது.

109 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும். பிஎஸ் 4 அல்லது பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்டு இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். மேலதிக விபரங்கள் மற்றும் ஆக்டிவா 6ஜி குறித்தான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6G விலை ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்

image source – motorbeam