ஸ்கூட்டர் நாயகன் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் சாதனை

0

இந்தியர்களின் முதல் தேர்வாக மாறியுள்ள ஸ்கூட்டர் நாயகன் ஹோண்டா ஆக்டிவா முதன்மையான இருசக்கர வாகனமாக 17ஆம் நிதி ஆண்டில் பிடித்துள்ளதை தொடர்ந்து 1.5 கோடி உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.

honda activa scooter reaches 15million

ஸ்கூட்டர் நாயகன்

  • 2001 ஆம் ஆண்டு முதல் ஹோண்டா ஆக்டிவா விற்பனை செய்யப்படுகின்றது.
  • தற்பொழுது ஆக்டிவா ஸ்கூட்டரின் 4வது தலைமுறை ஆக்டிவா 4ஜி விற்பனை செய்யப்படுகின்றது.
  • கடந்த நிதி ஆண்டில் 27.59 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதன்மையான இருசக்கர வாகனமாக உயர்ந்துள்ளது.

honda activa 4g reaches

பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கினை பின்னுக்கு தள்ளி ஆக்டிவா 16-17 ஆம் நிதி ஆண்டில்  27.59 லட்சம் ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

 

ஹோண்டாவின் ஆக்டிவா 4G ஸ்கூட்டரில் 109சிசி ஹோண்டா இகோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.

activa infographic

 

சாதனை நாயகன் பற்றி சில துளிகள்

  • அறிமுகம் செய்த 2001 ஆம் ஆண்டு 55,000 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.
  • முதலில் 102சிசி எஞ்சினை பெற்றே ஆக்டிவா செயல்பட்டு வந்தது.
  • 2009 ஆம் ஆண்டில் காம்பி பிரேக் சிஸ்டம் என்ற அமைப்பை பெற்று 110சிசி மற்றும் புதிய டிசைன் அம்சங்களுடன் ஆக்டிவா சந்தைக்கு வந்தது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.
  • 2012-2013 ஆம் நிதி ஆண்டில் முதன்முறையாக 10 மில்லியன் அல்லது 1 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்தது.
  • 2013 ஆம் ஆண்டு ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • 12-13 ஆம் நிதி ஆண்டில் சந்தை மதிப்பு 16 சதவீதம்ஆகும். தற்பொழுதைய சந்தை மதிப்பு 32 சதவீதம் ஆகும்.
  • குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையில் 1.50,00,000 ஆக்டிவா தயாரிக்கப்பட்டுள்ளது.

honda activa 2001