2019 ஹோண்டா CBR650R ரூ.7.70 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்

0

2019 honda cbr650r

முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்குகின்ற புதிய ஹோண்டா CBR650R விலை ரூ.7.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 22 ஹோண்டா விங் டீலர்கள் மற்றும் புதிய ஹோண்டா பிக்விங் டீலரிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Google News

சமீபத்தில் நீக்கப்பட்ட சிபிஆர்650எஃப் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய சிபிஆர்650ஆர் பைக் மாடல் முதன்முறையாக EICMA 2018 மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஹோண்டா CBR650R சிறப்புகள்

மிகவும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 650 சிசி இன்லைன் நான்கு சிலிண்டர்களை பெற்ற  என்ஜின் அதிகபட்சமாக 87.16 BHP குதிரைத்திறன் மற்றும் 60.1 Nm முறுக்கு விசை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் , கூடுதலாக Honda Selectable Torque Control System (HSTC) பொருத்தப்பட்டுள்ளது.

2019 honda cbr650r red

ஸ்டைலிஷான இந்த மோட்டார்சைக்கிள் மாடலில் சிவப்பு மற்றும் மெட்டாலிக் பிளாக் என இருநிறங்களை பெற்றதாக விளங்க உள்ளது. 41 mm கொண்ட ஷோவா பென்டிங் வால்வு ஃபோர்க்குளை பெற்றதாகவும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற புதிய பைக்கில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் கொண்ட 310மிமீ பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது.

முழு எல்இடி ஹெட்லைட் வசதியை பெற்று இரு பிரிவாக அமைந்துள்ள ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என பல்வேறு அம்சங்களை கொண்டதாக சிபிஆர்650ஆர் பைக் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

Honda CBR 650R Matte Gunpowder Black Metallic