ரூ.1.85 லட்சத்தில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 விற்பனைக்கு வெளியானது

0

honda hness cb 350 bike

ஹோண்டா இந்தியா விற்பனைக்கு வெளியிட்டுள்ள புதிய ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விலை ரூ.1.85 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Google News

மிக சிறப்பான ரெட்ரோ ஸ்டைலிங் அம்சத்தை பெற்றுள்ள ஹைனெஸ் சிபி 350 பைக்கில் 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவத்திலான ஹெட்லைட்டில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு  டர்ன் இன்டிகேட்டர், டேங்க் டிசைன், வட்ட வடிவத்திலான ரியர் வியூ மிரர் மற்றும் பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்றது.

ஹைனெஸ் சிபி 350 பைக்கில்  DLX Pro மற்றும்  DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது. குறிப்பாக பிரீமியம்  DLX Pro வேரியண்டில் டூயல் டோன் மற்றும் ஸ்மார்ட் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மட்டும் கூடுதலாக அமைந்துள்ளது.

இந்த மாடலின் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 விலை பட்டியல்

DLX – ரூ. 1.85 லட்சம்

DLX Pro – ரூ. 1.90 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

web title – Honda H’ness CB350 bike price revealed