முதன்முறையாக ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விலை உயர்வு

0

honda hness cb 350 bike

இந்தியாவில் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற ஹோண்டாவின் முதல் மாடலான ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விலையை அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.  கிளாசிக் 350, ஜாவா, இம்பீரியல் 400 மற்றும் மீட்டியோர் 350 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Google News

348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவத்திலான ஹெட்லைட்டில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு  டர்ன் இன்டிகேட்டர், டேங்க் டிசைன், வட்ட வடிவத்திலான ரியர் வியூ மிரர் மற்றும் பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்றது.

சிபி 350 பைக்கில்  DLX Pro மற்றும்  DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது.

DLX – ரூ. 1,86,500 லட்சம்

DLX Pro – ரூ. 1,92,500 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)