ஹோண்டா ஹார்னெட் 2.0 Vs போட்டியார்ளகளில் – எந்த பைக் வாங்கலாம் ?

0

honda hornet 20 vs tvs apache rtr 200 4v vs bajaj pulsar ns200

180சிசி-200சிசி சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்குடன் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளுடன் போட்டியிடுகின்றது. இந்த மூன்று மாடல்களில் மிக சிறப்பான வசதிகள் மற்றும் விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

Google News

முந்தைய ஹார்னெட் 160ஆர் வெற்றியை தொடர்ந்து சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற CBF190R பைக்கின் என்ஜின் மற்றும் வடிவ தாத்பரியங்களை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ஹார்னெட் 2.0 மாடலில் சில கவர்ச்சிகரமான வசதிகள் அமைந்திருந்தாலும், என்ஜின் பவர், டார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டியாளர்களை விட குறைவானதாக அமைந்துள்ளது.

tvs apache rtr 200 4v

மூன்று பைக்குகளின் என்ஜின் பவர், டார்க் ஒப்பீடு அட்டவனை..,

விபரம்

ஹோண்டா ஹார்னெட் 2.0

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

பஜாஜ் பல்சர் NS200

என்ஜின்

184.4cc, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு, எஃப்ஐ என்ஜின்

197.5cc, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு உடன் ஆயில் கூலர் எஃப்ஐ என்ஜின்

199.5cc,ஒற்றை சிலிண்டர், 4-வால்வு SOHC, லிக்யூடு கூல்டு எஃப்ஐ என்ஜின்

பவர்

17.2PS at 8500rpm

20.5PS at 8500rpm

24.5PS at 9750rpm

டார்க்

16.1Nm at 6000rpm

16.8Nm at 7500rpm

18.5Nm at 8000rpm

கியர்பாக்ஸ்

5 வேகம்

5 வேகம் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட்

6 வேகம்

 

அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்கில் மிக சிறப்பான முறையில் ஆயில் கூலிங் பெற்ற 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொண்டிருப்பதுடன், நெரிசல் மிகுந்த இடங்களில் ஆக்ஸிலேரேட்டர் உதவியின்றி கிளட்ச் மூலமாக குறைந்த வேகத்தில் பயணிக்கு அனுமதிக்கின்ற  (Glide Through Technology -GTT) வசதி பெற்றிருக்கின்றது.

பல்சர் என்எஸ்200 மாடல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு லிக்யூடு கூலிங் நுட்பத்தை கொண்டு அதிகப்படியான பவர் மற்றும் டார்க் பெற்று முன்னிலை வகிக்கின்றது.

இறுதியாக, 184.4சிசி என்ஜினை பெற்ற ஹார்னெட் 2.0 மாடல் பவர் மற்றும் டார்க் என அனைத்திலும் பின் தங்கியுள்ளது.

bajaj pulsar ns200

விபரம்

ஹோண்டா ஹார்னெட் 2.0

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

பஜாஜ் பல்சர் NS200

ஃபிரேம்

டைமன்ட் டைப்

டபுள் கார்டிள் ஸ்பிளிட் சிங்க்ரோ ஸ்டிஃப்

ஹை ஸ்டிஃப்னெஸ் லோ ஃபிளக்ஸ் பெரிமீட்டர்

முன்புற சஸ்பென்ஷன்

யூஎஸ்டி ஃபோர்க்கு

டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு

டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு

பின்புற சஸ்பென்ஷன்

மோனோஷாக்

மோனோஷாக்

மோனோஷாக்

முன்புற பிரேக்

276mm பீடெல் டிஸ்க் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்

270mm பீடெல் டிஸ்க் டூயல் சேனல் ஏபிஎஸ்

300mm டிஸ்க் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்

பின்புற பிரேக்

220mm பீடெல் டிஸ்க்

240mm பீடெல் டிஸ்க் உடன் ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புராடெக்‌ஷன்

230mm டிஸ்க்

முன்புற டயர்

110/70-17

90/90-17

100/80-17

பின்புற டயர்

140/70- 17

130/70 R17

130/70-17

 

அடுத்ததாக, பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் புதிய ஹார்னெட் 2.0 மாடலில் முன்புறத்தில் கோல்டு நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றதாக அமைந்துள்ளது. பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 276 மிமீ பீடெல் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ பீடெல் டிஸ்க் பெற்றதாக அமைந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல் பிரேக்கிங் அமைப்பில் மிக சிறப்பாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் முன்புறத்தில் 270 மிமீ பீடெல் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ பீடெல் டிஸ்க் உடன் ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புராடெக்‌ஷன் பெற்றதாக அமைந்துள்ளது. ஷாக் அப்சார்பரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றதாக அமைந்துள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றதாக அமைந்துள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ பீடெல் டிஸ்க் பெற்றதாக அமைந்துள்ளது.

அளவுகள்

விபரம்

ஹார்னெட் 2.0

அப்பாச்சி RTR 200 4V

பல்சர் NS200

நீளம்

2047mm

2050 mm

2017mm

அகலம்

783mm

790 mm

804mm

உயரம்

1064mm

1050 mm

1075mm

வீல்பேஸ்

1355mm

1353 mm

1363mm

கிரவுண்ட் கிளியரன்ஸ்

167mm

180mm

168mm

எரிபொருள் டேங்க்

12 லிட்டர்

12 லிட்டர்

12 லிட்டர்

இருக்கை உயரம்

590mm

800mm

எடை

142kg

153kg

156kg

சிறப்பம்சங்கள்

மற்ற இரு மாடல்களை விட டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் உள்ள சில வசதிகள் மேம்பட்டதாகவும், நவீனத்துவமாகவும் அமைந்துள்ளது. அவற்றில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரைடிங் அனலிட்டிக்ஸ், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட் போன்றவை குறிப்பிடதக்கதாகும்.

ஹார்னெட் 2.0 மாடலில் பகல், இரவு நேரங்களில் தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், பேட்டரி இருப்பினை அறியும் வசதி, முழுமையாக எல்இடி விளக்குகள் இடம்பெற்றுள்ளது.

honda hornet 2.0 cluster

இறுதியாக, பல்சர் என்எஸ் 200 மாடல் சற்று வசதியில் பின்தங்கி, செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், எல்இடி டையில் லேம்ப் வசதியை மட்டும் கொண்டுள்ளது.

ஹார்னெட் 2.0 Vs அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Vs பல்சர் என்எஸ்200 – விலை

மூன்று பைக்குகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு வசதிகள் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக், டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட வசதிகளுடன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி குறைந்த விலையில் அமைந்துள்ளது.

பல்சர் என்எஸ்200 பைக்கின் விலை குறைவாக அமைந்திருப்பதுடன் 6 வேக கியர்பாக்ஸ், அதிகப்படியான பவர் என அசத்துகின்றது.

இறுதியாக, புதிய மாடலாக ஹோண்டா ஹார்னெட் விளங்கினாலும் அதிகப்படியான விலை பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Honda Hornet 2.0

TVS Apache RTR 200 4V

Bajaj Pulsar NS200

ரூ. 1,30,182

ரூ.1,28,567

ரூ.1,29,658

(சென்னை விற்பனையக விலை)

எந்த பைக் வாங்கலாம் ?

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விலை உட்பட பல்வேறு வசதிகள் பாதுகாப்பு சார்ந்த அம்சங்ளை கொண்டு முன்னிலை வகிக்கின்றது. குறைவான வசதிகளை பெற்றிருந்தாலும் பல்சர் என்ஸ் 200 சிறப்பான பவர் 6 வேக கியர்பாக்ஸ் என முன்னிலை படுத்தப்படுகின்றது. ஹார்னெட் 2.0 மாடல் புதிதாக தெரிந்தாலும் கூடுதலான விலை, குறைவான பவர், குறைந்த வசதிகள் அப்பாச்சி உடன் ஒப்பீடுகையில் என்பதனை கவனிக்க வேண்டும். எனவே, டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி நிச்சியமாக சிறந்த தேர்வாக அமையும்.

2020 TVS Apache RTR 200 4V