இந்தியாவில் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் வருகையா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தையில் விற்பனையில் உள்ள ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்

ரெட்ரோ தோற்ற வடிவமைப்பை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கூப்பி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட்ட வடிவ முகப்பு விளக்குடன், நேர்த்தியான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் 108சிசி எஞ்சினை பெற்றுள்ள இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் ஆக்டிவா 4ஜி மாடலில் உள்ள ஹெச்இடி 110சிசி எஞ்சின் பொருத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

யமஹா ஃபேசினோ ஸ்கூட்டருக்கு போட்டியாக வரவுள்ள இந்த மாடல் ரெட்ரோ தோற்ற விரும்பிகளுக்கு ஏற்ற வகையில் இந்த மாடல் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும், சமீபத்தில் ஹோண்டா க்ரூம் மினி பைக் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது உறுதியாகியுள்ளது.

Recommended For You