இந்தியா வரவிருக்கும் ஹோண்டா ரிபெல் 500 பைக் சிறப்புகள்

0

honda rebel 500 headlight

இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பிரிமீயம் வரிசை பைக்குகளில் ரிபெல் 500 க்ரூஸர் ஸ்டைல் மாடலை அடுத்த சில் மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Google News

சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அட்வென்ச்சர் ரக ஆப்பிரிக்கா ட்வீன் அறிமுகத்தின் போது ஹோண்டா வெளியிட்டுள்ள தகவலின் படி அடுத்த சில மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் நடுத்தர ரக மோட்டர் சைக்கிள் சந்தையில் தங்களது பங்களிப்பினை அதிகரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, 300சிசி முதல் 650சிசி க்கு இடையிலான திறன் பெற்ற மாடல்ளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற அட்வென்ச்சர் ஸ்டைல் CB500X மற்றும் ரிபெல் 500 என இரு மாடல்களும் முதற்கட்டமாக வெளியாகலாம். முதலில் ரிபெல்லின் முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மிகவும் ஸ்டைலிஷான க்ரூஸர் ரக மாடலைப் பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் ரெட்ரோ தோற்ற பின்னணியாக வடிவமைக்கப்பட்டு வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், டெயில்லைட், வட்ட வடிவ நெகட்டிவ் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், இரண்டு டிரீப்மீட்டர் போன்றவற்றை பெற்றுள்ளது. 690 மிமீ மட்டும் இருக்கையின் உயரம் கொண்டுள்ளதால் குறைவான உயரம் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக அமையும்.

சர்வதேச அளவில் 300சிசி என்ஜின் மற்றும் 500சிசி என்ஜின் என இரு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்தியாவில் முதற்கட்டமாக ரிபெல் 500 விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 471cc பேரல்ல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 46 HP பவர் மற்றும் 43 NM டார்க்கினை வழங்குவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று கூடுதலாக சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.

Honda Rebel 500 bike

இந்த மாடலில் உள்ள 11.2 லிட்டர் பெட்ரோல் கலனை நிரப்பினால் அதிகபட்சமாக 300 கிமீ பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது. எனவே, லிட்டருக்கு சராசரியாக 27 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.

ட்யூப்லர் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடலில் 41 மிமீ ஷோவா சஸ்பென்ஷன், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர், 16 அங்குல வீல், டூயல் சேனல் ஏபிஎஸ், இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக ஹோண்டா ரிபெல் 500 பைக் இந்தியாவில் சிகேடி அதாவது பாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைத்து விற்பனை செய்ய உள்ள நிலையில், அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவிலே முழுமையாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, ரிபெல்லின் விலை ரூ. 4.50 லட்சத்தில் வெளியிடப்பட்டலாம். உள்நாட்டில் முழுமையாக தயாரிக்கப்படும் போது, விலை கணிசமாகக் குறைந்து ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குகள் அமையலாம்.

இந்த மாடலுக்கு க்ரூஸர் ஸ்டைல் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு அல்லது மீட்டியோர் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும்.