மஹிந்திரா கஸ்ட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்

0

mahindra-gusto-125

மஹிந்திரா டூ வீலர் நிறுவனத்தின் கஸ்ட்டோ அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வெளியிட உள்ளது.

Google News

அமெரிக்கா மஹிந்திரா விற்பனை செய்கின்ற ஜென்ஜி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் மற்றும் பீஜோ நிறுவனத்தின் இ-லூடிக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மஹிந்திரா தயாரித்து வருகின்றது. ஜென்ஜி மற்றும் இ-லூடிக்ஸ் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை புதிய கஸ்ட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

3 கிலோவாட் மோட்டார் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கின்ற இந்த ஸ்கூட்டர் 50-60 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக பயணிக்கவும் மற்றும் சிங்கிள் சார்ஜ் மூலம் 80 கிமீ ரேஞ்சு வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பீஜோ இ-லூடிக்ஸ் ஸ்கூட்டரும் 3 கிலோவாட் மோட்டாரில் பெற்றதாகவும், இதனை மஹிந்திரா தனது பிதாம்பூர் ஆலையில் தயாரித்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

ஆதாரம் -autocarpro.in