எம்.வி அகஸ்டா புரூடேல் 800 பைக் களமிறங்கியது!

0

இத்தாலியை மையமாக கொண்டு செயல்படும் எம்.வி அகஸ்டா நிறுவனத்தின் புதிய எம்.வி அகஸ்டா புரூடேல் 800 சூப்பர் பைக் மாடல் ரூ. 15.59 லட்சம் எக்ஸ-ஷோரூம் இந்தியா விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

mv agusta brutale800

Google News

எம்.வி அகஸ்டா புரூடேல் 800 சூப்பர் பைக்

மிக நேர்த்தியான ஸ்டைலிசான வளைவுகளை பெற்ற அற்புதமான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மாடலாக அறியப்படுகின்ற புரூடேல் 800 பைக்கில் அதிக ஆற்றல் வாய்ந்த யூரோ4 தரத்துக்கு ஏற்ற எஞ்சின் இடம்பெற்றுள்ளது. ஆனால் முந்தைய மாடலை விட 16 ஹெச்பி ஆற்றல் குறைக்கப்பட்டு 2 என்எம் டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2017 MV Agusta Brutale 800 headlamp

11,500rpm வேகதில் அதிகபட்சமாக 110 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 7600rpm வேகதில் அதிகபட்சமாக 83Nm டார்க்கினை வழங்கும் மூன்று சிலிண்டர் பெற்ற 798cc எஞ்சின் பெற்றுள்ளது. இதில் சிலிப்பர் கிளட்ச் மற்றும் பை டைரக்‌ஷனல் க்விக் ஸ்விஃப்டர் நுட்பத்துடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புரூடேல் 800 பைக்கில் சிறப்பு மோட்டார் வெய்கிள் இன்டிகிரேட்டேட் கட்டுப்பாடு அமைப்பு (Motor Vehicle Integrated Control System-MVICS), 8 வகையான டிராக்‌ஷன் கன்ட்ரோல் மோட், மூன்று விதமான ஏபிஎஸ் லெவல் மற்றும் எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டம் உள்பட நார்மல், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் ஆகிய டிரைவிங் மோடுகளை பெற்றுள்ளது.

mv agusta brutale800 engine

முன்புறத்தில் 300 மி.மீ இரட்டை டிஸ்க் பிரேக் வசதியுடன் கூடிய Marzocchi யூஎஸ்டி ஃபோருக்குகளும், பின்புறத்தில் முழு அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பருடன் கூடிய 220மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக் உள்ளது.

mv agusta brutale800 cluster

போட்டியாளரான ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் எஸ் மாடலை விட ரூ. 7 லட்சம் வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்வி அகஸ்டா புரூடேல் 800 சூப்பர் பைக் விலை ரூ. 15.59 லட்சம் எக்ஸ-ஷோரூம் இந்தியா ஆகும்.

mv agusta brutale800 side