இந்தியாவிற்கு 5 எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் மட்டும் ஒதுக்கீடு

0

MV Agusta Brutale 800 RR America

சர்வதேச அளவில் 200 பைக்குகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா ஸ்பெஷல் எடிசன் இந்தியாவிற்கு 5 யூனிட்டுகள் மட்டும் ரூபாய் 18.73 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

Google News

தோற்ற அமைப்பில் மட்டும் பல்வேறு மாறுதல்களை சாதாரண ப்ரூடெல் 800 ஆர்ஆர் மாடல் அடிப்படையில் எந்த நுட்பம் மாற்றங்களும் இல்லாமல் இந்த ஸ்பெஷல் பதிப்பு விற்பனைக்கு கிடைக்கின்றது.

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர்

ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்ட இந்த பைக்கில் 798சிசி  மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 பிஎச்பி குதிரைத்திறன், 87 என்எம் முறுக்குவிசை திறனையும் வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800RR பைக் மோட்டார் ராயல் ஷோரூம்களில் கிடைக்க உள்ளது.

1975 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தையில் வெளியிட்ட எம்வி அகுஸ்ட்டா எஸ் அமெரிக்கா 750 பைக்கினை நினைவுக்கூறும் வகையில் சிறப்பு எடிசனை ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.