2017 பஜாஜ் பல்ஸர் RS200 விற்பனைக்கு வந்தது – updated

2017 பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக் ரூ.1.23 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் பிஎஸ்4 எஞ்சின் , ஏஹெச்ஓ மற்றும் இரண்டு புதிய வண்ணங்களில் ஆர்எஸ் 200 கிடைக்க உள்ளது.

new bajaj pulsar rs200 colors

பல்ஸர் ஆர்எஸ்200 பைக்

இரட்டை புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பைக் மாடலாக விளங்கும் RS200 பைக்கில் 24.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் வந்துள்ளது.

முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃபிளை டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள்  சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய நிறங்கள் RS200 பைக்
சர்வதேச அளவில் மஞ்சள் , கருப்பு , நீலம் , வெள்ளை மற்றும் நீலம் என 5 நிறங்களில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்தியாவில் மஞ்சள் மற்றும்கருப்பு வண்ணங்களில் மட்டுமே கிடைத்து வந்த ஆர்எஸ் 200 விரைவில் நீலம் கலந்த வெள்ளை நிறம் மற்றும் கருப்பு, சில்வர் கலந்த நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த புதிய நிறங்களை டீலர்களை வந்தடைந்துள்ளது.
2017 பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ் 200 பைக் விலை ரூபாய் 1,23,589 (Non-ABS) மற்றும் ரூபாய் 1,35,805 (ABS).. ( அனைத்தும் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை )
பல்சர் ஆர்எஸ்200 படங்கள்
bajaj pulsar 200 rs headlamp
bajaj pulsar 200 rs black
bajaj pulsar 200 rs black silver
bajaj pulsar 200 rs instrumental cluster