17.61 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ரூபாய் 17.61 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.21.71 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு SP பைக் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு

  • இரண்டு ஃபயர் பிளேடு மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
  • முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.
  • டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஹோண்டா விங் டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும்.

25வது ஆண்டில் களமிறங்கும் ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்கினை கொண்டாடும் வகையில் சிறப்பு வசதிகளை பெற்ற வேரியன்ட்களாக சர்வதேச அளவில் விற்பனைக்கு செய்யப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் இந்த மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள ஹோண்டா நிறுவனத்தின் பிரிமியம் பைக் டீலர்களான ஹோண்டா வீங் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு பைக்கில் 999சிசி கொண்ட 4 சிலிண்டர் பெற்ற லிக்விட் கூல்டு இஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 191.6 ஹச்பி ஆற்றலையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் குயிக் ஷிஃப்ட உடன் இணைந்த 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முந்தைய மாடலை விட 2017 ஆம் வருடத்தின் சிபிஆர்1000 ஆர்ஆர் பைக் மாடலின் 90 சதவித பாகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான நவின அம்சங்களை பெற்றதாக உள்ள இந்த பைக்குகளில் டிஎஃப்டி திரையுடன், கைரோஸ்கோபிக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், திராட்டில்-ஃபை-வயர் தொழில்நுட்பம் , 9 விதமான டார்க் கண்ட்ரோல், செலக்டபிள் இஞ்சின் பிரேக்கிங், ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்டீரிங் டேம்பர், ஹை ரெசொல்யூசன் டிஃஎப்டி டிஸ்பிளே மானிட்டர் மற்றும் பவர் செலக்டர் போன்றவற்றை பெற்றிருப்பதுடன் எஸ்பி மாடலில் கூடுதலாக செமி-ஆக்டிவ் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்களை கூடுதலாக பெற்று விளங்குகின்றது.

ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விலை
  • சிபிஆர்1000 ஆர்ஆர் ஃபயர் பிளேடு – ரூ.17.61 லட்சம்
  • சிபிஆர்1000 ஆர்ஆர் ஃபயர் பிளேடு எஸ்பி – ரூ.21.71 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

Recommended For You