ரூ.18 லட்சம் விலையில் ட்ரையம்ப் ராக்கெட் 3 வெளியானது

0

triumph-rocket-3

இந்திய சந்தையில் சக்தி வாய்ந்த பவர் க்ரூஸர் பைக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ப் ராக்கெட் 3 முந்தைய மாடலை விட ரூ.2 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ. 18 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆர் வேரியண்ட் கிடைக்க துவங்கியுள்ளது.

Google News

சர்வதேச அளவில் R மற்றும் GT என விற்பனை செய்யபடுகின்ற நிலையில் இந்தியாவில் ஆர் மாடல் வெளியிடப்பட்டு 2458 சிசி, இன்லைன் 3 சிலிண்டர், DOHC,  நீரால் குளிரூட்டப்படுகின்ற என்ஜின் பொருத்தப்பட்டு 6000 ஆர்.பி.எம்மில் 167 பிஎஸ் பவர் மற்றும் 4000 ஆர்.பி.எம்மில் 221 என்எம் டார்க் வழங்குகின்றது. 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் பெற்று வருகிறது.

ட்ரையம்ப் ராக்கெட் 3 பைக் அலுமினிய சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்பக்கத்தில் 120 மிமீ பயணிக்கும் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் 107 மிமீ பயணிக்கும் ஷோவா மோனோஷாக் அப்சார்பர் உள்ளது.

இத மாடலில் ப்ரெம்போ ஸ்டைல்மா பிரேக்குகளை இரட்டை 320 மிமீ டிஸ்க்குகளுடன் 4-பிஸ்டன் மோனோபிளாக் காலிப்பர்களும், 300 மிமீ டிஸ்க் பின்புறத்தில் ப்ரெம்போ எம்4.32 4-பிஸ்டன் காலிப்பர்களை பெற்றுள்ளது. இந்த பைக் முந்தைய மாடலை விட 40 கிலோ வரை எடை குறைந்துள்ளது.

triumph rocket 3

பாக்கெட் பிளாக் மற்றும் கோரோசி ரெட் ஆகிய 2 வண்ணங்களில் ராக்கெட் 3 வழங்கப்படுகிறது, மேலும் 50 க்கும் மேற்பட்ட ஆக்செரீஸ்கள் வழங்கப்படுகின்றன.