Automobile Tamil

அடுத்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பெயர் மீட்டியோர்.! – Royal Enfield Meteor

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், பாபர் ரக ஸ்டைல் மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் ( Royal Enfield Meteor ) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாயுப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பாக இந்த மாடல் ராயல் என்ஃபீல்ட்  KX என்ற பெயரில் 2018 EICMA மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்தது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக என்ஃபீல்டு நிறுவனம் 500சிசி கொண்ட மீட்டியோர் மற்றும் 700சிசி கொண்ட சூப்பர் மீட்டியோர் என இரு மாடல்களை விற்பனை செய்துள்ளது. எனவே, இந்த பெயரை தற்போது காப்புரிமையை ஐரோப்பாவில் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. இந்த தகவலை பென்னெட்ஸ் யூகே தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர்

கடந்த ஆண்டு ஐக்மா (EICMA) மோட்டார் ஷோ கண்காட்சியில் முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்ட மிகவும் ஸ்டைலிஷான பாபர் ரக கேஎக்ஸ் கான்செப்ட் மோட்டார்சைக்கிளினை உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல என்ஃபீல்டு இந்தியா திட்டமிட்டு வருகின்றது.

838cc வி பேரலல் ட்வின் என்ஜின் கொண்டதாக காட்சிக்கு வந்த பாபர் வடிவத்தை பெற்ற இந்த கேஎக்ஸ் கான்செப்ட் பெரும்பாலானோரை கவர்ந்த நிலையில், இந்த மாடலை உற்பத்தி நிலையில் கொண்டு வரும்போது இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 மாடல்களில் உள்ள என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் மீட்டியோர் என்ற பெயருக்கான காப்புரிமை கோரிய விண்ணப்பத்தை இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பான வெளியீடு 3 ஆம் தேதி ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3,2019 வரை என்ஃபீல்டு நிறுவனம் இந்த பெயரை பெறுவதற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு தனது பிரசத்தி பெற்ற கிளாசிக் சீரிஸ் மாடலின் அடுத்த தலைமுறைக்கான வசதிகளுடன் பிஎஸ் 6 என்ஜின் கொண்டு சோதனை செய்து வருகின்றது. மேலும் தண்டர்பேர்டு வரிசையின் புதிய மாடலையும் சோதித்து வருகின்றது.

Exit mobile version